வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வரும் சூர்யா, இதையடுத்து ,தனது சொந்த 2டி பட நிறுவனம் சார்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு சமீபத்தில் இயக்குனர் விஜய்யை காதலித்து மணந்த அமலா பாலிடம் பேச்சு வார்த்தை நடத்தி,தற்போது அமலா பாலையே ஒப்பந்தமும் செய்து விட்டது.சூர்யா பட நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பாக ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’தமிழ் ரீமேக்கில் கதையின் நாயகியாக ஜோtதிகா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸே தமிழிலும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.