வஞ்சிரம் எனும் சென்னை மீஞ்சூர் பகுதியை சார்ந்த தாதா மைம் கோபி, சென்டிமென்டாய் தன் குழந்தை மாதிரி வளர்த்து வரும் வாஸ்து மீன் கொள்ளை போகிறது. அது, அங்கே இங்கே கை மாறி, இளம் காதல் தம்பதிகள் சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் வசம் வந்து சேர்கிறது. ராசியான மீன் வந்த நேரம் அது நாள் வரை, பிறந்தது முதல் தொட்ட எதுவும் துலங்காது பேட் லக் பாண்டி ஆகத் திரியும் சிபிராஜூக்கு குட்லக் ஒர்க் அவுட் ஆனதா? அல்லது அந்த மீனை தேடும் வஞ்சிரத்தின் அடியாட்கள் மற்றும் சிலராலும் பேட் லக்கே தொடர்ந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை. முன்பாதியை மொக்கை காமெடியாகவும், பின் பாதியை ஏகத்துக்கும் காம நெடியாகவும் தந்திருக்கின்றனர்.காக்கா முட்டையில் தேசிய விருது வாங்கிய நடிகை ஐஸ்வர்யா இப்படத்தில் அதை சரக்கடித்தும், பப்பில் ஆட்டம் போட்டும், ‘குத்து,குத்து உன் வெறி தீர குத்து’ போன்ற காட்சிகளின் மூலம் அதை தொலைத்தும் இருக்கிறார். மீனை வச்சு படம் எடுத்து இருக்காங்களே! குடும்பம், குட்டியுடன் போகலாம். ஜாலியாக இருக்கும்(?) என நினைத்தால், அதை தவிடு பொடியாக்கியுள்ளனர்.