தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 7 நாட்களாக காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் ஆகிய பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த நடிகர், இசையமைப்பாளர்ஜி .வி.பிரகாஷ் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது:’தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம். டெல்லியில் நம் தமிழக விவசாயிகள் ஆறாவது நாளாக போராடி வருகின்றனர். ஆனால் நாம் எல்லோரும் பார்த்து கொண்டிருக்கின்றோம். தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்கள் கோரிக்கை நிறைவேற குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான். அதை நாம் விட்டுக்கொடுக்க கூடாது.நம்முடைய ஆதரவை கொடுக்க வேண்டியது மிக முக்கியம். எனவே எல்லா தமிழர்களும் ஒன்று சேருங்கள். டெல்லியில் இருக்கும் நம்முடைய விவசாயிகள் நம்முடைய உறவினர்களுக்கு நம் குடும்பத்தாருக்கு நமது ஆதரவை தெரிவிக்க வேண்டும்.டெல்லியில் இருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளின்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும், நிலுவையில் இருக்கும் விவசாய கடன்கள் கொடுக்கப்பட வேண்டும், வறட்சி நிவாரண நிதி கொடுக்கப்பட வேண்டும், இனிமேல் எந்த தற்கொலைகளும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தமிழனாய் இந்த கோரிக்கையை வைக்கிறேன்இ வ்வாறுஅவர் கூறியுள்ளார்.