கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடி இன்றளவும் பலராலும் ரசித்து சிரித்து மகிழப்பட்டு வருகிறது.இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் செந்தில், சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார்.நேற்று செந்தில் பிறந்த நாளை அடுத்து சூர்யா தலைமையிலான தானா சேர்ந்த கூட்டம்ப டக்குழுவினர் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இரண்டு வாழைப்பழங்கள் வடிவில் ஒரு கேக்கை தயார் செய்து அவருடைய பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.












