திருமாவளவன், வைகோ, வேல்முருகன் போன்ற அரசியல் தலைவர்கள் தன்னை இலங்கை செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால், அவர்கள் கூறும் காரணம் தனக்கு உடன்பாடு இல்லை எனினும் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டதால்,நடிகர் ரஜினிகாந்த் தான் இலங்கை செல்வதாக திட்டமிட்டிருந்ததை ரத்து செய்வதாக அறிக்கையின் மூலம் இன்று மதியம் தெரிவித்தார்.ரஜினியின் இந்த முடிவை சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார். அனைத்து சினிமா ஸ்டார்களும் ‘பயந்தாங் கோழிகள் ‘ (கோழைகள் )என்றும், ரஜினிகாந்த் மட்டும் அதில் வேறுபட்டவர் இல்லை என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது திரையுலகில் நடிகர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இன்று காலை சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தளத்தில் ‘ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு எழுந்துள்ள எதிர்ப்பையும் மீறி பயப்படாமல் அவர் இந்த விழாவில் கலந்து கொண்டால் அவரை தாராளமாக பாராட்டலாம்’ என்றுகூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.