அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘டூரிங்டாக்கீஸ்’திரைப்படத்தின்வெற்றி,இயக்குனர்எஸ்.ஏ.சந்திரசேகரைமுழுநேரநாயகனாகமாற்றிஉள்ளது.இப்படத்தைத்தொடர்ந்துஇரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர்ஏ.வெங்கடேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களிடம் கூறிய ஒரு கதை மிகவும்பிடித்துப் போனதால், அப்படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம்தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம்தொடங்க உள்ளது. இது தவிர இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாகஒரு படத்தில் நடிக்க உள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படம், இந்தித் திரையுலகில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற Baghban எனும்படத்தின் கதையை தழுவியது என்கிறார்கள். இப்படத்தைவிக்னேஷ், கிருஷ்ணா எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர்.இந்த படத்திற்கு ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்’ எனும் தலைப்புவைக்கப்பட்டுள்ளது.