ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை பொறுக்கிகள் என்று கூறிய சுப்ரமணியன் சாமி சமீபத்தில் கமல், ரஜினி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்தார்.இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், கமல், ரஜினி இருவரையும் கோழைகள் என்று கூறியுள்ளார். அவர் மேலும் அந்த பேட்டியில் கூறியதாவது: நடிகர் கமல்ஹாசனைப் பொறுத்தவரை அகங்காரம் பிடித்த முட்டாள். ரஜினிகாந்த் இலங்கைக்கு பயந்து கொண்டு அங்கு செல்வதை ரத்து செய்து விட்டார். ஒரு நிகழ்ச்சியின் அழைப்பிதழை ஏற்றுக்கொள்ளும் போது அனைத்தையும் பற்றி யோசிக்க வேண்டும். அதன் பிறகு தான் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.சினிமாக்காரர்களுக்கு எப்பவும் பயம் தான். இதில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கோழைகள் என்று சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சுவாமியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ரஜினி,கமல் ரசிகர்கள் சுப்ரமணிய சாமியை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.