செல்வராகவனின் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ ஆகிய இரண்டு படங்களும் கார்த்தி, தனுஷ் ஆகிய இருவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களாகும்.இந்த நிலையில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘புதுப்பேட்டை’ ஆகிய இரண்டு படங்களின் இரண்டாம் பாக கதையை கடந்த இரண்டு வருடங்களில் எழுதி முடித்துவிட்டதாகவும், ஆனால் தற்போது அடுத்தடுத்த படங்களின் பணிகள் இருப்பதால் காலம் வரும்போது இந்த இரண்டு படங்களையும் இயக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.