ரஜினியின் சூப்பர் ஹிட் வசனமான ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற தலைப்பில், ஜி.வி.பிரகாஷ் நடித்து அப்படம் சமீபத்தில் வெளியானது.. இந்நிலையில் கடந்த 1979ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘குப்பத்து ராஜா’ படத்தின் தலைப்பே, ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள இன்னொரு படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளதாம்.இந்த படத்தின் மூலம் பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு ஒருசில நாட்களில் வெளியாகும் என்கிறது படக்குழு.