ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இதில் சிம்பு மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா மற்றும் ஸ்டைலீஷ் இளைஞர் ஆகிய வேடங்களில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா,நீதுசந்திரா ஆகியோர் நடித்து வந்தனர். . இந்நிலையில் தற்போது நான்காவதாக சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தில் முக்கிய வேடத்தில் சனாகான் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முன்னதாக சில நாட்கள் முன்பு சிம்பு தனது வலைதளப் பக்கத்தில் இப்படத்தில் நான் மூன்று வேடங்களில் நடிக்கவில்லை நான்கு வேடங்களில் நடிக்கிறேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.