தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த், ராதிகா வாக்களித்தனர்.சென்னையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான இன்று காலை சென்னை அண்ணா நகர் கந்தசாமி கல்லூரியில் எட்டு மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் என 27 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பலரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.. ராதிகா,சுகாசினி, சௌத்ரி, பாக்யராஜ் பூர்ணிமா, சசிகுமார், அருண்பாண்டியன், மன்சூர் அலிகான்.இயக்குனர் முருகதாஸ்உள்பட பலர் வாக்களித்தனர் இன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் எனத்தெரிகிறது.