மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இருக்கிறார் தொகுப்பாளினி ரம்யா

உடற்பயிற்சி மீதும், பளு தூக்கும் போட்டியின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர், தொகுப்பாளினி ரம்யா. கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்ற ரம்யா,

தற்போது மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார். கோட்டுர்புரத்தில் சமீபத்தில் நடைபெற்ற இந்த பளு தூக்கும் போட்டியில், எல்லா வயது ஆண்களும். பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில் ரம்யா, 70 கிலோ, 75 கிலோ மற்றும் 80 கிலோ பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடி, அதில் தங்கம் பதக்கம் வென்றார்.