தமிழ்,,தெலுங்கு மலையாளம்,கன்னடம் இந்தி,திரையுலகின் முன்னணி பின்னணி பாடகியாக விளங்கும் ஸ்ரேயா கோஷல் நேற்று திடீரென மும்பையைச் சேர்ந்த தனது இளம் வயது நண்பரும், தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையில் நடந்த இந்த திருமணத்தில் திரையுலகப் பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. மிக நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.வங்காளி முறைப்படி நடந்த இந்தத் திருமணத்திற்கு திரையுலகினர் எவருமே அழைக்கப்படவில்லை.
திருமணம் முடிந்த பிறகு,இன்று காலை தான் திருமணச் செய்தியை வெளியிட்டனர். விரைவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஷைலாதித்யா மும்பையில் உள்ள பெரிய ஐடி நிறுவனத்துக்கு சொந்தக்காரர்என்பது குறிப்பிடதக்கது