ரைட் வ்யூ சினிமாஸ் (Right View Cinemas) தயாரிப்பில்’சதுர அடி 3500′
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஸ்டீபன்
ஒளிப்பதிவு பிரான்ஸிஸ்.இசை; கணேஷ் ராகவேந்திரா
நடிகர்கள்
ரகுமான்,நிகில் (அறிமுகம்),ஆகாஷ் ( அறிமுகம்),
இனியா,கோவை சரளா,எம்எஸ்பாஸ்கர்,மனோபாலா,தலைவாசல் விஜய்,பிரதாப் போத்தன்,பரவை முனியம்மா,
‘பெசன்ட் நகர் ’ரவி,இயக்குநர் ஷரவண சுப்பையா,
சுவாதி தீக்ஷித்,மேக்னா முகேஷ்,மற்றும் பலர்.
படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது, ‘ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு வித்தியாசமான திரைக்கதையுடன் தயாராகியிருக்கும் படம் ‘சதுர அடி 3500’. பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புலனாய்வு செய்யும் ஒரு கேரக்டர், அமானுஷ்ய சக்திகளை கண்டு கொள்வது எப்படி? அதனை எப்படி எதிர்கொள்ளவேண்டும்? வாழ்ந்து இறந்த ஒருவரின் ஆத்மாவின் பயணம் எங்கு எப்படியிருக்கும்? இது போன்ற சுவராஸ்யமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இப்படத்தின் திரைக்கதை தயாராகியிருக்கிறது. இப்படத்தின் படபிடிப்பு பெங்களூரூ, சாலக்குடி, சென்னையின் புறநகர் பகுதி மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளில் நடைபெற்றது. படபிடிப்பு நடைபெறும் போது படக்குழுவினர்களில் பலருக்கு எதிர்பாராத சம்பவங்கள் நடந்தேறின. இதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக படபிடிப்பு பல முறை தள்ளிவைக்கப்பட்டது. ஹாரர், காமெடி, ஆக்ஷன், லவ் என கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியிருக்கும் இதன் படபிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் நாயகனான ஆகாஷ் என்பவரை இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்துகிறேன். நிகில் என்ற புதுமுக நடிகரும் அறிமுகமாகிறார். அத்துடன் டிவி டான்ஸ் ஷோக்களின் மூலமாக பிரபலமான ‘நாட்டிய தாரகை’ மேக்னா முகேஷ் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார். ‘துருவங்கள் 16’ படத்தின் மூலமாக முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் நடிகர் ரகுமான் முக்கிய கேரக்டரில் அற்புதமாக நடித்திருக்கிறார். படபிடிப்பு நிறைவடைந்திருப்பதால் இதன் ஆடியோ வெளியிடு விரைவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.’ என்றார் இயக்குநர் ஸ்டீபன்.