தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள் , இசைஞானி இளையராஜா அவர்களை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று சந்தித்தனர். இச் சந்திப்பு குறித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியதாவது, ‘வாழ்க்கையிலேயே சந்தோஷமான நிகழ்வு இது , இளையராஜா வோடு நாங்கள் இருந்த அரை மணி நேரம் மேலும் ஒரு வருடம் நாங்கள் வேகமாக உழைக்க எங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. நாங்கள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இதை ஒரு Tributeட்டாக நடத்தவுள்ளோம். இவ்விழா இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் பாராட்டு விழாவாக இருக்கும். இது சாதாரணமான பாராட்டு விழாவாக இருக்காது , இது வரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டு விழாவாக இது இருக்கும். இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் ஒரு விழாவாக இவ்விழா இருக்கும். இந்த பாராட்டு விழா சென்னையில் தான் நடக்கும். இந்த விழா சென்னையில் நடப்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.ஏனென்றால் இசைஞானி இளையராஜா நம் அனைவருடைய வாழ்விலும் இருக்கிறார். நாம் சிரிக்கின்றபோதிலும் , நம்முடைய சோகத்திலும் அவருடைய பாடல்கள் தான் நமக்கு துணை. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நன்றி. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்யம். அதற்க்கான பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. இது நிச்சயம் 1௦௦ பேர் கலந்து கொள்ளும் ஒரு பாராட்டு விழாவாக இருக்காது. இவ்விழா பிரம்மாண்டமான ஒரு விழாவாக இருக்கும் என்றார்.