சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கும்கி’, ‘குட்டிப்புலி’, ‘பாண்டிய நாடு’, ‘ஜிகர்தண்டா’, ‘ மஞ்சப்பை’, ‘நான் சிகப்பு மனிதன்’ என பிசியான நடிகையாகவும் மாறினார்.ஆகிய படங்களில் நடித்தார்! ஏகப்பட்ட வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகிறது. ஆனால், லட்சுமி மேனன் நடித்துக் கொண்டே ப்ளஸ் டூ படித்து வருகிறார். வருகிற மார்ச் – ஏப்ரல் மாதங்களில் ப்ளஸ்-டூ பரீட்சை வரவிருப்பதால், அந்த பரீட்சை எழுதுவதற்காக லட்சுமி மேனன் நடிப்புக்கு விஷால் படத்தைக்கூட மறுத்துவிட்டு ,(படிப்பு முக்கியமாச்சே!) கேரளா சென்றுள்ளார்!இந்நிலையில்,‘கொம்பன்’. கார்த்தி -லட்சுமி மேனன் நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக விருக்கிறது. இந்நிலையில் லட்சுமி மேனனன், தனக்கு கிராமத்து வேடங்கள், பக்கத்து வீட்டு பெண் மாதிரியான வேடங்களில் நடித்து போரடித்து விட்டது என்றும், தொடர்ந்து வருகிற கேரக்டர்களும் அது மாதிரி இருப்பதால் இனி அதுபோன்ற வேடங்களில் நடிக்க விருப்பமில்லை என்றும், அதனால் நடிப்புக்கு குட்-பை சொல்லிவிட்டு, இனி படிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்தப் போகிறேன் என்றும், அதனால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளேன் என்றும் லட்சுமி மேனன் கூறிய மாதிரி சில இணைய தளங்களிலும், சில பிரபல பத்திரிகைகளிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இது குறித்து லட்சுமி மேனனிடம் கேட்ட போது, பாவடை தாவணி கேரக்டர்கள் போரடித்து விட்டது. அதனால் நல்ல வித்தியாசமான கேரக்டர்களுக்காக காத்திருக்கிறேன் .தற்போது பரிச்சைக்கு படிப்பதால் நடிக் கவில்லை என்று தான் சொன்னேன். ஆனால் ,இப்படி திரித்து செய்தி வெளியாகும் என்று நினைக்கவில்லை!என்கிறார்.