சுசி லீக்ஸ் விவகாரத்தால் தமிழ் சினிமாவே அதிர்ச்சியில் உறைந்து போனதென்னவோ உண்மைதான். அடுத்து யார் புகைப்படம் அல்லது வீடியோ வெளிவருமோ என ரசிகர்கள் பரபரப்புடன் காத்திருக்க, பார்ட்டி நடிகர், நடிகைகளோ வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு அலைந்தது எவராலும் மறுக்க முடியாது.இந்த பரபரப்பில் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு அதிரடியாக மூடப்பட்டது. ஆனால், சுசித்ராதான் ட்வீட் போட்டாரா அல்லது அவர் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இவ்விசயம் சற்றே மறைந்து போன நிலையில்,தற்போது சுசித்ரா நலமுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக சுசியின் கணவர் கார்த்திக், சுசியுடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.இவ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.