நடிகை ரம்பா கடந்த 2010-ம் ஆண்டு இலங்கை தமிழரான இந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு கனடாவில் வசித்து வந்தார். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து சென்னை வந்ததாக கூறப்படுகிறது.இதனிடையே நடிகை ரம்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இரண்டு பெண் குழந்தைகளுடம் தனியாக வாழ முடியவில்லை கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.அதே சமயம்ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரி இந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கணவன் -மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்கவும் அறிவுரை வழங்கியது.
நடிகை ரம்பா தனது கணவருடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது திடீர் திருப்பமாக இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்இ றுதியில் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக மனு தாக்கல் செய்தனர் ,இதையடுத்து இவ்வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.












