புகழ்பெற்ற இயக்குநர் இணையில் (கிருஷ்ணன்) பஞ்சு என்கிறஎஸ்.பஞ்சாபகேசன் அவர்களது 33-வது நினைவு நாளையொட்டி,பஞ்சு சரோஜா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சினிமாவின் பல்வேறுபிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்ற இயக்குநர் இணை‘கிருஷ்ணன்-பஞ்சு’ குறித்த ஆவணப்படத்தை, இந்திய சினிமாவின்மரியாதைக்கு உரிய பிரபலங்களின் முன்னிலையில் புகழ்பெற்றநடிகரும் ஓவியரும் சொற்பொழிவாளருமான திரு. சிவகுமார், நடிகர்திரு. சூர்யா ஆகியோர் இன்று வெளியிட்டனர். இந்தஆவணப்படத்தை ‘புளூ ஓஷன் பிலிம் அண்டு டெலிவிஷன்அக்காடமி’யின் தலைவர் திரு. தனஞ்செயன் இயக்கியுள்ளார்.இதற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் சுதர்சன் சீனிவாசன். பாஃப்டாதிரைப்படக்கல்லூரியின் ஒளிப்பதிவுத்துறை மாணவர்கள்,இவருக்கு உதவியாளர்களாகச் செயல்பட்டுள்ளனர். இதன்படத்தொகுப்பைக் கையாண்டிருப்பவர் ஜே.எஸ்.விக்னேஷ். பஞ்சுஅவர்களின் புதல்வர்கள் பிருத்விராஜ், சுபாஷ் சந்திரன், அபிமன்யுஆகியோர் ‘பஞ்சு சரோஜா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் இந்தஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு இணை, தமிழ் – தெலுங்கு – இந்தி – கன்னடம் ஆகியமொழிகளில் திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றதன் மூலம்,பிற தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகளும் அவர்களைப் பின்பற்றவழியமைத்துக் கொடுத்தனர். திரு.கிருஷ்ணன் படத்தின்திரைக்கதையில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வார்; திரு.பஞ்சுபடப்பிடிப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றை கவனித்துக்கொள்வார்.மூன்று இந்திய மொழிகளில், நாற்பது ஆண்டு கால அளவுக்குள்ஐம்பத்தாறு திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்த இயக்குநர்இணை இவர்கள் மட்டுமே!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அறிமுகமான ‘சதிலீலாவதி’ (1936)படத்தின்போது தொடங்கிய இந்த (கிருஷ்ணன் பஞ்சு) கூட்டணி, 1952-இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் அறிமுகம் செய்தது.பின்னர் இந்த இரு திலகங்களுடனும் தொடர்ந்து பல படங்களில்பணியாற்றி, தமிழ்த் திரைப்பட இயக்குநர்களிலேயே எவரும்செய்யாத சாதனையைச் செய்தது. மேலும் எஸ்.எஸ்.ராஜேந்திரன்,பானுமதி, சாரதா, எம்.என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி, மைனாவதி, ‘குலதெய்வம்’ ராஜகோபால், மு.க.முத்து உட்படத் திறமையானகலைஞர்கள் பலரை அறிமுகம் செய்தவர்களும் இவர்கள்தான். ‘ரத்தக்கண்ணீர்’ படம் மூலம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவைசினிமாவுக்கு மீண்டும் அழைத்துவந்ததும் இயக்குநர் இணைதான்!
கே.ஆர்.ராமசாமி தமிழ் சினிமாவில் கதாநாயகனாகஉருவானதற்கும்… நகைச்சுவை நடிகர்களான கலைவாணர்என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், ‘குலதெய்வம்’ ராஜகோபால்,டி.ஆர்.ராமச்சந்திரன், ‘தேங்காய்’ சீனிவாசன் ஆகியோர்கதாநாயகர்களாகத் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கும் இந்தஇயக்குநர் இணையே காரணகர்த்தாக்கள். ‘மார்க்கண்டேய’ நடிகர்சிவகுமார் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும்,திரையுலகில் வெற்றி பெற்றதும் இந்த இயக்குநர் இணையின்மூலமாகத்தான்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திருவாரூர் தங்கராசுஆகியோர் திரைப்பட வசனகர்த்தாக்களாகப் புகழ்வெளிச்சம்பெற்றதும் இவர்களால்தான். ‘முரசொலி’ மாறன்,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கவிஞர் வாலி ஆகியோரைதிரைக்கதை வசனகர்த்தாக்களாக அறிமுகப்படுத்தியதும்இவர்கள்தான். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாகப்புகழ்பெற்ற ஏ.பீம்சிங், எஸ்பி.முத்துராமன், ஆர்.விட்டல், பட்டுஎன்கிற பட்டாபிராமன், திருமலை மகாலிங்கம் ஆகியோரதுவளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர்களும்இவர்கள்தான். திரையுலகில் பின்னாளில் புகழ்பெற்ற கே.பாலசந்தர்,ஜே.மகேந்திரன், ஆரூர்தாஸ் போன்றோருடனும் இந்த இயக்குநர்இணை பணியாற்றியுள்ளனர்.
கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் மொத்தம் இயக்கியுள்ள படங்கள்: 56.தமிழில் இவர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை: 41. இந்தியில்11 படங்களையும், தெலுங்கில் 3 படங்களையும், கன்னடத்தில் ஒருபடத்தையும் இயக்கியுள்ளனர். இத்துடன் ஆவணப்படங்கள்மற்றும் விளம்பரப் படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளனர்.இவற்றில் இந்திப்படமான ‘பாபி’ 50 வாரங்கள் ஓடி மகத்தானவெற்றி பெற்றது. ‘பராசக்தி’ (தமிழ்), ‘லேத மனசுலு’ (தெலுங்கு), ‘தோ கலியான்’ (இந்தி) ஆகியவை 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழாகொண்டாடின. மீதமுள்ளவற்றில் 21 படங்கள் நூறு நாட்கள் ஓடிவெற்றி பெற்றுள்ளன. 31 படங்கள் 50 முதல் 75 நாட்கள் வரைஓடியுள்ளன. இந்த இருவரது 40 ஆண்டுகால இயக்குநர் பணியின்வெற்றிச் சாதனையின் சதவிகிதம், இவர்களின் சமகாலஇயக்குநர்களின் வெற்றி சதவிகிதத்தை விடப் பல மடங்கு அதிகம்!
தமிழ்நாட்டின் நான்கு முதல்வர்களான அறிஞர் அண்ணா(‘நல்லதம்பி’), மு.கருணாநிதி (‘பராசக்தி’, ‘பிள்ளையோ பிள்ளை’உட்பட 3 படங்கள்), எம்.ஜி.ஆர். (‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘இதயவீணை’, ‘எங்கள் தங்கம்’), ஜெ.ஜெயலலிதா (‘எங்கள் தங்கம்’, ‘அனாதை ஆனந்தன்’, ‘அக்கா தம்முடு’) ஆகியோருடன்பணியாற்றியுள்ளனர்.
இவர்களின் ஐந்து படங்கள் ரூ ‘குலதெய்வம்’, ‘தெய்வப்பிறவி’, ‘அன்னை’, ‘சர்வர் சுந்தரம்’, ‘குழந்தையும் தெய்வமும்’ ஆகியவைதேசிய விருது பெற்றன. இரண்டு படங்கள்: ‘உயர்ந்த மனிதன்’, ‘எங்கள் தங்கம்’ ஆகியவை தமிழக அரசின் பரிசுகளையும்பெற்றுள்ளன. இவை தவிர இவர்கள் பல்வேறுவிதமானஅங்கீகாரங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளனர்.
தமிழ்த்திரையுலக சாதனையாளர்களான ஜே.மகேந்திரன்,பி.லெனின், எஸ்பி.முத்துராமன், வி.சி.குகநாதன், பி.வாசு,ஆரூர்தாஸ், ஆர்.விட்டல், நடிகர்-நடிகையர்: சௌகார் ஜானகி,எம்.என்.ராஜம், சிவகுமார், லட்சுமி, எம்.ஆர்.ராதாரவி, சித்ராலட்சுமணன், மோகன் ராமன், தயாரிப்பாளர்கள்: ஏவி.எம்.சரவணன்,ஏவி.எம்.குமரன் ஆகியோருடன் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோரின்குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரது பேட்டி மூலமாக இந்தஆவணப் படம், முன்னோடிப் படைப்பாளிகளான கிருஷ்ணன்பஞ்சு ஆகியோருக்கு காணிக்கையாக்க சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
‘முன்னோடி இயக்குநர் இணை’ என்ற இந்த ஆவணப் படவெளியீடு குறித்து படத்தின் இயக்குநர் திரு.கோ.தனஞ்செயன், ‘‘புகழ்பெற்ற முன்னோடி இயக்குநர் இணையான கிருஷ்ணன்-பஞ்சுகுறித்த இந்த முக்கிய ஆவணப்படத்தை உருவாக்கியது எனக்கும்என் குழுவினருக்கும் பெருமைக்குரிய ஒரு தருணமாகும். இதன்மூலமாக அவர்களது புதுப் பாணியிலான படைப்புகள் குறித்துஅறிந்துகொள்ள நேர்ந்ததும், அதனூடாக அவர்களுக்குப் புகழஞ்சலிசெலுத்த வாய்ப்புக் கிடைத்ததும் எனது வாழ்வில் புதியதொருகற்றல் அனுபவமாக அமைந்தது. இப்பட உருவாக்கத்தில்செயலூக்கிகளாக இருந்த இயக்குநர் பஞ்சு அவர்களின் குடும்பஉறுப்பினர்களுக்கும், உற்ற துணையாக இருந்த நடிகர்சிவகுமாருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இயக்குநர்இணை குறித்த தெளிவான ஒரு பார்வை திரைக்கலை பயிலும்மாணவர்கள், ஊடகங்கள் மற்றும் திரைப்பட வரலாற்றுஆய்வாளர்கள் ஆகியோருக்கு உதவும் என்று எங்கள் குழு திடமாகநம்புகிறது!”
படத்தலைப்பு: இயக்குநர் முன்னோடிகள் – கிருஷ்ணன் பஞ்சு.
எண்ணம், ஆய்வு, எழுத்து, இயக்கம்: கோ.தனஞ்செயன் (பாஃப்டா)
தயாரிப்பு: பஞ்சு பிருத்விராஜ், பஞ்சு சுபாஷ் சந்திரன், பஞ்சுஅபிமன்யு ஆகியோர் – சரோஜா புரொடக்ஷன்ஸுக்காக.
பின்னணிக் குரல்: திரு. நாசர்.
ஒளிப்பதிவு: சுதர்சன் சீனிவாசன் மற்றும் பாஃப்டா மாணவர்கள்:கார்த்திக் பாண்டியன், விஸ்வநாதன், டார்வின் பிரபு, மௌலிசங்கர்,ஹரிபாபு,