பிரிட்டிஷ்காரர்கள்ஆட்சி காலத்தில் தாத்தா லிங்கேஸ்வரன் கட்டிய அணைக்கட்டிற்கு வரும் ஆபத்தை பேரன் லிங்கேஸ்வரன் தடுத்து
நிறுத்துவதுதான் ‘லிங்கா’படத்தின் கதை. எழுபது வருடங்களுக்கு முன், பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சிக்காலத்தில், கலெக்டராக இருந்த ராஜா
லிங்கேஸ்வரன், சோலையூர் கிராமத்து மக்களை வெள்ளத்தில் இருந்து காக்கவும், அவர்களது வாழ்வாதார பிரச்சனைகளை பூர்த்தி செய்யவும்,
கலெக்டர் பதவியை தூக்கி எறிந்து விட்டு,தனது அரண்மனை மற்றும் சொத்துக்களை விற்று, அம் மக்களுக்காக ,மக்களின் துணையோடு அணை ஒன்றை கட்டுகிறார்.ஆனால், அந்த ஊர் எட்டப்பன் மற்றும் பிரிட்டிஷ் கலெக்டரின் நயவஞ்சகம் காரணமாக,எந்த மக்களுக்காக அணையை கட்டினாரோ ,அதே மக்களால், விரட்டப்படுகிறார். இந்நிலையில் கதை எழுபதாண்டு காலத்தை கடக்கிறது…. மீண்டும் அந்த ஊர் மக்களுக்கும் அவர் கட்டிய அணைக்கும் ஆபத்து , அரசியல்வாதி ரூபத்தில் வருகிறது.. தாத்தா ரஜினி கட்டிய கோவில் ஒன்றை பேரன் ரஜினி வந்து திறக்க வேண்டும் அப்போது தான் நம் ஊருக்கு நல்லது என்கிறார் அந்த ஊர் பெரிய மனிதர், லாக்கப்பில் இருக்கும் ரஜினியை திட்டமிட்டு நாடகமாடி சோலையூர்
கிராமத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கிறார் அனுஷ்கா.அங்கு அவருக்கு தாத்தா ரஜினி குறித்து பலதகவல்கள் தெரிய வருகிறது. அந்த ஊர் மக்களுக்கும் அவர் கட்டிய அணைக்கும் ஆபத்துவருகிறது. அந்த ஆபத்தில் இருந்து எப்படி இவர்களைக் காக்கிறார் ராஜாவின் வாரிசு (பேரன் ரஜினி) என்பது தான் திரைக்கதையாக்கப்பட்டுள்ளது. லிங்கேஸ்வரன், லிங்கா என இரண்டு வேடங்களில் ரஜினி.. இதில் லிங்கா ரஜினி படு ஸ்டைலாக வலம் வருகிறார். அவருடன் சந்தானம், கருணாகரன் கூட்டணியி ன் காமெடி, அனுஷ்காவுடன் ரொமான்ஸ் கலாட்டா என ரஜினி படத்திற்கான அத்தனைவிஷயங்களுக்கும் குறைவில்லை.. ரஜினி சொல்லும் ‘பறக்காஸ்’ , பஞ்ச் டயலாக் இல்லை என்றாலும், இனிமேல் பலரின் வாயில் ‘பறக்காஸ்’ தான் வெளிவரும் முக்கியமாக கல்லூரிஇளவட்டங்கள் மத்தியில் ‘பிளாஸ்பேக்’கில் வரும் லிங்கேஸ்வரன் ரஜினி , பேரன் ரஜினியை முந்தி
விடுகிறார். 65 வயதை தொட்டு விட்ட நிலையிலும் . மிடுக்கு, கம்பீரம் என நிறைவான நடிப்பு. . ஆனால் ரஜினி தனது சொத்துக்களை மக்களுக்கு எழுதி வைக்கும் காட்சி உள்படசில காட்சிகள் ஏற்கனவே ‘முத்து’ மற்றும் சிவாஜி படங்களை கண் முன்னே நிறுத்துவதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்.பிளாஷ்பேக்கில் வரும் சோனாக்ஷியை விட, அனுஷ்கா தான் ரஜினிக்கு பொருத்தமான ஜோடியாக தெரிகிறார்.. ரஜினிக்கு இணையாக சந்தானத்தின் காமெடி அவ்வப்போது சரவெடிகள்.நன்றாகவே வெடிக்கின்றன. இறுதிக் காட்சியில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு சந்தானம் கொடுக்கும் பஞ்ச் ‘ நச் ‘ரகம். ரஜினியின் நாயகிகளாக வரும் சோனாக்ஷி மற்றும் அனுஷ்கா இருவருக்குமே நடிக்க வாய்ப்புடன் கூடிய பாத்திரங்கள்.
அருமையாக நடித்துள்ளனர். அந்த மரகத நெக்லஸ் திருடும் காட்சியில் அனுஷ்காவும் ரஜினியும் ரசிகரின் உள்ளங்களைக் கொள்ளையடிக்கின்றனர். ரஜினியிடம் அனுஷ்கா தன்னைப் பறிகொடுக்கும் நெருக்கமான காட்சிகளில் காதல் ரசம்..ரஜினி, சந்தானம் இருவரோடு கருணாகரனும், பாலாஜியும்
வந்து போகிறார்கள்.. விஜயகுமார், ராதாரவி, நடராஜ், மனோபாலா, அனுமோகன், இளவரசு, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன் படுத்தியுள்ளனர். வில்லனாக ஜெகபதி பாபு, வில்லனாக வந்து நல்லவராக மாறும் தேவ்கில், இன்ஸ்பெக்டராக வரும் பிரம்மானந்தம் இவர்களும் படத்தின் கதை நிகழும் இடங்களும் ஆந்திராவை அநியாயத்திற்கு ஞாபகப்படுத் துகிறது. ரத்தினவேலுவின் ஒளிப்பதிவில் அணைக்கட்டு காட்சிகள் அனைத்துமே பிரமாண்டம் ,மற்றும் அழகு. ரஜினிக்கு மட்டும் தனி லென்ஸ், பில்டர்களை
பயன்படுத்தியுள்ளார். ரயில் சண்டைக் காட்சியில் சுற்றி சுழலும் கேமிரா, மைசூர் மாளிகையின் அழகையும், அந்த அணைக்கட்டின்
பிரமாண்டத்தையும் காட்டி பிரமிக்க வைக்கிறது ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் திருப்திப்படுத்தும் அளவுக்கு இல்லை .ஏமாற்றி விட்டார். தமிழர்களுக்காக அணைகட்டிய பென்னிகுயி க் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, ரஜினியின் கதாபாத்திரத்தை வடிவமைத்து கதையை நகர்த்தியிருப்பது ஒவ்வொரு காட்சியிலும் நன்றாகவே வெளிப்படுகிறது. ஆனால் பிளாஸ்பேக் காட்சியின் நீளத்தை சுருக்கி, நிகழ்கால பிரச்சனைகளை அதிகப்படுத்தி அதற்கு தீர்வு கண்டிருந்தால் இதுவும் வழக்கமான ரஜினி படமாக அமைந்திருக்கும்…பல இடங்களில் காட்சிகளில் வேகம் குறைவதால் சிவாஜி, எந்திரன் என பிரமாண்ட ரஜினியை எதிர்பார்த்து வருபவர்களுக்கு ஏமாற்றமே…!