விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’தர்மதுரை’ படத்தில் இடம்பெறும் ’எந்தப் பக்கம்’ என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பாடலை எழுதிய கவிஞர்வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது. இது குறித்து வைரமுத்து கூறியதாவது, ”ஏழாவது முறையாக தேசிய விருது கிடைத்தது தமிழுக்கு கிடைத்த பெருமை. எனக்கு விருது கிடைத்ததில் பெருமை மொழிக்குத்தான். நான் வெறும் கருவிதான். நான் தர்மதுரை படத்தில் எழுதிய ’எந்தப் பக்கம்’ என்னும் பாடல் தற்கொலைக்கு எதிரானது. ‘தர்மதுரை’ படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி” என்று வைரமுத்து கூறியுள்ளார்.