‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் 5-வது படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. பிரபுதேவா இயக்கும் இந்த படத்தில் கார்த்தி, விஷால் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகியாக சாயிஷா நடிக்கிறார். ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ கதையை மறைந்த இயக்குனர் கே.சுபாஷ் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை சமீர் ரெட்டி கவனிக்கிறார். திரைக்கதை மற்றும் வசனத்தை சுபா எழுதுகின்றனர்.இப்படம் வன்முறைக்கும் அன்புக்கும் இடையில் நடக்கும் கதையாம். இதில் கார்த்தி, விஷால் இருவருக்கும் சமமான கதாபாத்திரங்களாம்! விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
சமீபத்தில் நடந்த நடிகர் சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கட்டிட நிதிக்காக நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் விஷால் இணைந்து 10 கோடி ரூபாய் தருவதாக கூறியிருந்தனர். அதற்கான முதல் முயற்சியாக 10 கோடி ரூபாய் திரட்டுவதற்காக இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.