இசைஞானி இளையராஜா மறைந்த இசைமேதை எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து ‘மெல்ல திறந்தது கதவு, ‘செந்தமிழ்ப்பாட்டு’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அப்பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அவருடைய இசைவாரிசு யுவன்ஷங்கர் ராஜாவுடன் முதல் முறையாக இணைந்து தற்போது பணியாற்றவுள்ளாராம்.’தர்மதுரை’ படத்தை அடுத்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கவுள்ள அடுத்த படத்திற்கும் யுவன்ஷங்கர் ராஜாவே இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இசைஞானியின் பங்களிப்பும் இருக்கும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இசைஞானியும் இளைய இசைஞானியும் இணையும் இந்த படத்தின் பாடல்கள் பழமையும் புதுமையும் இணைந்த ஒரு கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த படத்தை யுவன்ஷங்கர்ராஜாவே தனது ஒய்.எஸ்.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார்.ஏற்கனவே இந்நிறுவனம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் ‘கொலையுதிர்க்காலம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது