துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வந்த ‘ஓகே கண்மணி’படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து, தற்போது இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. ‘ரோஜா’ ‘அலைபாயுதே’ பட வரிசையில் இதுவும் ரொமான்டி காதல் கதையாக உருவாகி யுள்ளது ! தற்போது இப் படத்தின் தலைப்பை இயக்குனர் மணிரத்னம் மாற்றி ‘ஓ காதல் கண்மணி’ என்று வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஆனால் இயக்குனர் மணிரத்னம் தலைப்பு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைப்பாளர்