ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும், 2.0 படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினிகாந்த் , அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், நடிக்க தயாராகி வருகிறார்.கபாலியில் ரஜினியை மலேசிய தாதாவாக காட்டிய ரஞ்சித் இதில் மும்பை தாதாவாக காட்டப்போகிறாராம்.மும்பையில் இருந்த ஒரு டான் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம் என்றும்,மும்பையில் ஒரு காலத்தில் தாதாவாக இருந்த டான் ஹாஜி மஸ்தான் என்ற தமிழரின் வாழ்க்கை தான் படமாக்கப்படுகிறது என்கிறது கோலிவுட் தரப்பு! ஹாஜி மஸ்தானின் சொந்தஊர் இராமநாதபுரம் என்றும் கூறப்படுகின்றது.