ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில்,ரஜினியுடன் , அக்சய் குமார், எமி ஜாக்சன்உள்ளிட்ட பலர் நடிக்க இப் படம் வரும் தீபாவளியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது திடீர் திருப்பமாக படத்தின் VFX பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸ் தேதி அடுத்த வருடம் ஜனவரி 25ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது உலகத்தரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக தான் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக லைக்கா நிறுவனத்தை சேர்ந்த ராஜு மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.