இந்திய திரைப்படத்துறையில் இருக்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களான பத்மஸ்ரீ உலகநாயகனின் உத்தமவில்லன் மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களை வெளியிட உள்ளன.
இந்த இரண்டில் உத்தமவில்லன் கமல்ஹாசன் உடன் அனுஷ்கா ஷெட்டி நடித்து கமல்ஹாசன் கதை எழுதி ரமேஷ் அரவிந்த் இயக்கிய திரைப்படம். இந்த திரைபடத்தின் முன்னோட்டம் கடந்த பொங்கல் அன்று வெளியிடப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி முருகன் திரைப்படமும் சிவகர்த்திகேயன் நடித்து பொன்ராம் இயக்கயுள்ள காமெடி திரைப்படம் ஆகும். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.