தென்னிந்திய சினிமாவில் ‘நம்பர் ஓன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது நண்பேண்டா, நானும் ரவுடி தான், மாஸ் என முன்னணி கதாநாயகர்களுடன் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
நடிகர்கள் சிம்பு, பிரபுதேவாஆகியோருடனான காதல் அடுத்தடுத்து தோல்வியிலேயே முடிந்தது, அதே சமயம் சிம்புவுக்கு ஹன்ஷிகாவுடன் ஏற்பட்ட காதலும் முறிந்து போனது குறிப்பிடதக்கது,இந்நிலையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில்,மீண்டும் சிம்புவுடன் இணைந்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் மீண்டும் சிம்புவுடன், நயன் தாராவிற்கு காதல் துளிர்விட்டுள்ளது என்றும் ,விரைவில் இருவரும் திருமணம் கூட செய்து கொள்ளலாம் என்கிற அளவுக்கு கோடம்பாக்கத்தில் வதந்தி பரவியது.
ஆனால், நயன் தாராவோ,இதெல்லாம் யாரோ வேண்டாதவர்கள் கிளப்பி விடும் வதந்தி என்றதோடு, இனி சினிமாகாரர்கள் யாரையும் காதலிப்பதாக இல்லை, நல்ல வரன் வெளியில் அமைந்தால் விரைவில் செட்டில் ஆகிவிடுவேன் என்கிறாராம்.