‘சகாப்தம்’ படத்தை தொடர்ந்து, விஜயகாந்தின் மகனான சண்முகபாண்டியன் அடுத்து ஒளிப்பதிவாளரும், படத் தயாரிப்பாளருமான பி.ஜி.முத்தையா இயக்கும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘மதுர வீரன்’ என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.. இந்த படத்தில் சமுத்திரகனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு வரும் (24-ஆம் தேதி) சென்னையில் தொடங்கவுள்ளது.இப்படத்தி கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.