
சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் முன்று பரிமானங்களில், முதன் முறையாக பல வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான’நாளை நமதே’ என்ற அதே படத்தலைப்பில் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இயக்குனர் பொன்ராமிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகர் சதிஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.