Tuesday, January 26, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

Bagubali-2 Review

admin by admin
April 28, 2017
in Reviews
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 Baahubali-2-Review-Rating-Release-Date-The-Conclusion-Movie-2017 பிரபாஸை மகிழ்மதி அரசாங்கத்தின் அரசனாகவும், ராணாவை படைத் தளபதியாகவும் ராஜமாதாவான ரம்யாகிருஷ்ணன் பிரகடனம் செய்கிறார். அதன்பிறகு, பிரபாஸுக்கு அரசனாக முடிசூட்ட பட்டாபிஷேகம் செய்ய நாட்கள் குறிக்கிறார்கள். இதற்கிடையே, அரசனாக இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக பிரபாஸை பல்வேறு தேசங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் அனுப்பி வைக்கிறார். கூடவே கட்டப்பா சத்யராஜும் செல்கிறார்.

அவ்வாறு பிரபாஸ் செல்லும்போது குந்தலதேசத்தில் கொள்ளையர்களால் நிறைய மக்கள் கொல்லப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதேநேரத்தில், குந்தலதேசத்தின் யுவராணியான அனுஷ்காவையும் பார்க்கிறார். வாள் வீச்சில் அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்யும் அவரது வீரத்தை கண்டு வியக்கிறார். மேலும், அவளது அழகிலும் மயங்குகிறார்.

You might also like

பூமி .( விமர்சனம்.)

மாஸ்டர் . ( விமர்சனம்.)

மாறா ( விமர்சனம்.)

அவளிடம் தன்னை அப்பாவியாக காட்டிக்கொண்டு, கவர நினைக்கிறார் பிரபாஸ். இந்நிலையில், பிரபாஸும், சத்யராஜும் குந்தலதேசத்தில் இருக்கிறார்கள் என்று ஒற்றன் மூலமாக அரண்மனையில் இருக்கும் ராணாவுக்கு தகவல் செல்கிறது. அந்த தகவலில் பிரபாஸ், அனுஷ்காவை காதலித்து வருவதாகவும் செய்தி இருக்கிறது. கூடவே அனுஷ்காவின் ஓவியமும் இருக்கிறது. அனுஷ்காவின் ஓவியத்தை பார்த்து ராணாவுக்கும் அவள்மீது ஈர்ப்பு வருகிறது.

அவளை தன்னுடைய மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இதை தனது அம்மாவிடம் சொல்ல, அவரும் ராணாவுக்கு அனுஷ்காவை திருமணம் செய்துவைப்பதாக உறுதி கொடுக்கிறார். பெண் கேட்பதற்கு முன்பாக விலையுயர்ந்த பொருட்களை அனுஷ்காவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய வீட்டுக்கு நேரில் வந்து பெண் கேட்க தைரியமில்லாமல், தன்னை ஒன்றும் இல்லாதவர் போல் விலையுயர்ந்த பொருட்களை அனுப்புகிறார்களே என்று பதிலுக்கு அனுஷ்கா, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் பதில் கடிதம் ஒன்றை அனுப்புகிறார்.

இதனால் ராஜமாதாவான ரம்யா கிருஷ்ணன் கோபமடைகிறார். உடனே, அனுஷ்காவை கைது செய்துவர ஆணையிடுகிறார்கள். அந்த நேரத்தில் பிரபாஸ் அங்கிருக்கும் விஷயத்தை நாசர், ரம்யா கிருஷ்ணனிடம் சொல்ல, அவர் மூலமாகவே அனுஷ்காவை கைது செய்து அழைத்துவர தூது அனுப்புகிறார்கள்.

அதற்குள் குந்தல தேசத்தில் கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களை எதிர்க்க குந்தலதேசத்து வீரர்கள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், பிரபாஸ் உள்ளே புகுந்து அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். அவரது வீரத்தை கண்டு குந்தலதேசமே வியந்து நிற்கிறது. அப்போதுதான், பிரபாஸ் மகிழ்மதி அரசாங்கத்தின் இளவரசர் பாகுபலி என்ற விஷயத்தை கட்டப்பா போட்டு உடைக்கிறார். அதேநேரத்தில், அனுஷ்கா மீது அவர் காதல் கொண்டுள்ள விஷயத்தையும் கூறுகிறார்.

இதைக்கேட்டு குந்தலதேச மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். அதேநேரத்தில் மகிழ்மதி அரசாங்கத்தால் புறா  மூலமாக அனுப்பப்பட்ட தகவல் உத்தரவு பி ரபாசுக்கு கிடைக்கிறது.  ராஜ மாதாவின்க ட்டளைப்படி அனுஷ்காவை கைது செய்யப்போவதாகவும், அதற்கு அனுஷ்கா ஒத்துழைக்கவேண்டும் என்றும் அன்பாக கூறுகிறார். முதலில் முரண்டு பிடிக்கும் அனுஷ்கா, அதன்பிறகு பிரபாஸ் அவளுடைய கற்புக்கும், மானத்துக்கும் எந்தவித குந்தகமும் விளைவிக்காமல் உயிருள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்று கொடுக்கும் வாக்கின் அடிப்படையில் அவனுடன் செல்ல முடிவெடுக்கிறாள்.

ஒருபக்கம் ராணாவுக்கு அனுஷ்காவை மணம் முடித்துக் கொடுப்பதாக ரம்யா கிருஷ்ணன் வாக்கு கொடுத்திருக்கிறார். மறுபக்கம் திருமணம் செய்துகொள்வேன் என்று அனுஷ்காவிட்ம் பிரபாஸ் வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த வாக்குகளால் யார் யாருக்கு? என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது என்பதை படம் முழுக்க  அதிரடி திருப்பங்களாக  சொல்லியிருக்கிறார்கள்.

படம் ஆரம்பிக்கும்போதே,முதல் பாகத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சிகளை கிராபிக்ஸில் காட்டுவது ரொம்பவும் அருமையாக இருக்கிறது. அதைப் பார்க்கும்போது படத்திற்குள் நாம் எப்போது நுழைவோம் என்ற எதிர்பார்ப்பு நம்மை ஆக்கிரமித்து விடுகிறது. விடுகிறது.

 படத்தில் பிரபாஸுக்கான க்கான மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி அசத்தியிருக்கிறார்இந்த படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். குந்தலதேசத்தில் கொள்ளையர்களுடன் சண்டைபோடும் காட்சியில் ஒரே வில்லில் மூன்று அம்புகளை வைத்து விடும் காட்சிகள், குந்தலதேசத்து மக்களிடம் பிரபாஸை மகிழ்மதியின் இளவரசன் என்று கட்டப்பா அறிமுகப்படுத்தும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்குள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 முதல்  பாகத்தில் அழுக்குத் துணியுடன் ஒருசில காட்சிகள் வலம் வந்த  அனுஷ்கா, இந்த பாகத்தில்  கூடுதல் காட்சிகளில்  வலம் வருகிறார்.அரசியாக அழகாக வந்து அனைவரையும் கவர்கிறார். வாள் சண்டையில் ரொம்பவும் கைதேர்ந்தவர்போல் நடித்திருக்கிறார். வீரம், காதல், பாசம், கருணை என எல்லாவற்றையும் தனது வித்தியாசமான முகபாவணைகளை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். வசனங்களிலும் துணிச்சலான பெண்ணுக்குண்டான நடிப்புடன் அழகாக நடித்திருக்கிறார்.

ராணா பகைமை கலந்த நடிப்புடன் ரசிக்க வைத்திருக்கிறார். முதல் பாதியில் ரொம்பவும் அமைதியாகவே தனது காய்களை நகர்த்தும் இவர், இரண்டாம் பாதியில் தனது முழு ஆக்ரோஷத்தையும் காட்டும் விதத்தில் ரசிகர்களின் வெறுப்பை பெறுகிறார். ரம்யா கிருஷ்ணன், ராஜமாதாவுக்கான கம்பீரத்துடன் ரசிக்க வைக்கிறார். கம்பீரமாக பேசும் இவர் வசனங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு ஆக்ரோஷத்தை ஏற்படுத்துகிறது.

நாசர் இந்த பாகத்தில் ரொம்பவும் சாதுர்யமாக காய் நகர்த்தும் சூத்ரதாரியாக பளிச்சிடுகிறார். ஒவ்வொரு முறையும் ராணா இவரை ஆசுவாசப்படுத்தும் காட்சிகளில் எல்லாம் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். கட்டப்பாவாக வரும் சத்யராஜ் படம் முழுக்க ஆக்ரமித்திருக்கிறார். முதல் பாகத்தில் ஆக்ரோஷமான படைத்தளபதியாக வந்த சத்யராஜ், இந்த பாகத்தில் தனக்கே உரித்தான நக்கல், நையாண்டியிலும் கலக்கியிருக்கிறார். அவை எல்லாமே ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக, நாம் எல்லோரும் எதிர்பார்த்த கட்டப்பா ஏன் பாகுபலி கொன்றார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் காட்சியில் அவரது நடிப்பால் ரசிகர்களை கண்கலங்க வைத்திருக்கிறார்.

கடந்த பாகத்தில் அனுஷ்காவுக்கு எந்தளவுக்கு குறைவான காட்சிகள் இருந்ததோ, அதைவிட குறைவான காட்சிகளே தமன்னாவுக்கு இருக்கிறது. முந்தைய பாகத்தில் இருந்த ஆக்ரோஷத்துடன் இந்த பாகத்திலும் நடித்திருக்கிறார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைக்கதைக்கு வேறு எந்த இயக்குனரும் ஈடுகொடுக்க முடியாது என்ற அளவுக்கு இந்த பாகத்திலும் திரைக்கதை மெச்சும்படியாக இருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் திருப்பத்துக்கு மேல் திருப்பமாக  நகர்ந்து  கொண்டே செல்வதால் படம் பார்ப்பவர்களுக்கு எந்த இடத்திலும் சலிப்பே தட்டவில்லை. நிறைய புல்லரிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. பிரபாஸ் அறிமுகமாகும் காட்சி பெரிதாக இல்லாவிட்டாலும், அடுத்தடுத்த காட்சிகள் ஒவ்வொன்றும் ரொம்பவும் மாஸாக இருக்கிறது.

இந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்கமுடியுமா? என்பது சந்தேகம்தான். இப்படியொரு படத்தை கொடுத்ததற்காக ராஜமவு லிக்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.ஆஸ்கார் விருதுக்கு தகுதியான இயக்குனர் . படமும் அப்படியே!

அதேபோல், படம் முழுவதுமே  கிராபிக்ஸ் காட்சிகள்  நிறைந்திருந்தாலும்அ வை அனைத்துமே மிகவும்  தத்ரூபமாக அமைந்திருக்கிறது. மரகதமணியின் இசையில் பாடல்கள் எல்லாம் இனிமை. அதை படமாக்கியவிதமும் அருமை. பின்னணி இசை,  கதையை அழகாக நகர்த்தி செல்ல பலமாக அமைந்திருக்கிறது.

 மொத்தத்தில் பாகுபலி பிரமாண்டத்தின் உச்சம்!

Previous Post

நடிகர் வினுசக்ரவர்த்தி காலமானார்!

Next Post

என் நிலைமை என் எதிரிக்கு கூட வரக் கூடாது!-பின்னணிப்பாடகி சுசித்ரா.

admin

admin

Related Posts

பூமி .( விமர்சனம்.)
Reviews

பூமி .( விமர்சனம்.)

by admin
January 15, 2021
Master New Stills.
Reviews

மாஸ்டர் . ( விமர்சனம்.)

by admin
January 14, 2021
மாறா ( விமர்சனம்.)
Reviews

மாறா ( விமர்சனம்.)

by admin
January 9, 2021
ஷகீலா .( விமர்சனம்.)
Reviews

ஷகீலா .( விமர்சனம்.)

by admin
December 25, 2020
சியான்கள் .( விமர்சனம்.)
Reviews

சியான்கள் .( விமர்சனம்.)

by admin
December 22, 2020
Next Post
என் நிலைமை என் எதிரிக்கு கூட வரக் கூடாது!-பின்னணிப்பாடகி சுசித்ரா.

என் நிலைமை என் எதிரிக்கு கூட வரக் கூடாது!-பின்னணிப்பாடகி சுசித்ரா.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

அதிமுக அரசு யாருக்காக தடை விதிக்கிறது?- கமல்ஹாசன் காட்டம்.!

அதிமுக அரசு யாருக்காக தடை விதிக்கிறது?- கமல்ஹாசன் காட்டம்.!

January 26, 2021
சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார்! சென்னை ரிட்டர்ன் எப்போது?

சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட மாட்டார்! சென்னை ரிட்டர்ன் எப்போது?

January 25, 2021
விஜய் உடைத்த தடை! உற்சாகத்தில் தயாரிப்பாளர்கள்.! மகிழ்ச்சியுடன் சக்தி பிலிம் பாக்டரி

விஜய் உடைத்த தடை! உற்சாகத்தில் தயாரிப்பாளர்கள்.! மகிழ்ச்சியுடன் சக்தி பிலிம் பாக்டரி

January 25, 2021
வெள்ளையானை நடிகைக்கு காதல் கல்யாணமா?

வெள்ளையானை நடிகைக்கு காதல் கல்யாணமா?

January 25, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani