‘திரையுலகில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தான் விரைவி ல் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்’’ என்று கவர்ச்சி கட்டழகி நமீதா கூறியதாக சில இணைய தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததது. ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை என மறுத்து காட்டமாக அறிக்கை வெளியி ட்டுள்ளார்.
‘‘நான் கல்யாணம் பண்ணிக் கொள்வது பற்றி யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. தானாக பரவி வருகிற செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. கல்யாணம் என்ற பேச்சுக்கே எனது மனதில் இடமில்லை. மக்கள் பணியில் என்னை இணைத்துக் கொள்வதே எனது எண்ணம்! அதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறேன். எப்போதும் எனக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை நண்பரகளுக்கு நன்றி! இனியும் அதே அன்போடு ஆதரவு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.