பிரபல தொலைக்காட்சி தொடரான வாணி ராணி தொடர் பிரபலம். இதனை தயாரிப்பவர் சுகுமாறன் என்பவர். சென்னை ஆழ்வார் திருநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் சுகுமாறன். அவரது மனைவி குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வாணி ராணி தொடரில் நடித்து வரும் நடிகை சபீதா ராயுடன் சுகுமாறனுடன் கடந்த 2 நாட்களாக தங்கியுள்ளதாக கூறபடுகிறது. அப்போது இருவருக்கும் பணம் தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது.
இதனால் சுகுமாறன், சபீதாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல, ஆத்திரமடைந்த சபீதா, சுகுமாறனுடன் பணம் கேட்டு, வாசலிலேயே நின்று சண்டையிட்டுள்ளார்.
சுகுமாறன் சபீதா ராயின் தலைமுடியை இழுத்து போட்டு அடிக்க, பதிலுக்கு சுகுமாறனின் சட்டையை கிழித்து தாக்கியுள்ளார் சபீதா ராய்.
சின்னத்திரையை சேர்ந்த இருவரும் நடுத்தெருவில் நள்ளிரவில் சண்டைபோட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தை யாரோ செல்போனில்ப டம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் இவிவகராம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.