நெடுஞ்சாலை நாயகன் ஆரியின் பெண் குழந்தைக்கு
லண்டனில் எளிய முறையில் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது.
ஆரி-நதியா தம்பதியினருக்கு February 5 அன்று அழகான பெண்குழந்தை பிறந்தது.இந்த ஆண்டின் துவக்கம் முதலே ஜல்லிக்கட்டு முதல், அஞ்சல் வங்கி கணக்கு வரை போராட்டத்திலே இருந்த ஆரி, தன் வீட்டின் குட்டி தேவதையைக் காண லண்டன் சென்று இருந்தார்.கணவர் வந்தபின் தான் குழந்தைக்கு பெயர் வைக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்
அவரின் மனைவி நதியா.குடும்பத்தார்கள் சூழ எளிமையான முறையில் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. ஆரி, நதியா பெயர்களில் உள்ள எழுத்துக்கள் வரும்படியாக குழந்தைக்கு
ரியா அனகாரிகா என்று பெயரை சூட்டியிருக்கிறார்கள்..
“எங்கள் வீட்டு தேவதைக்கு உங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என்று அன்போடு கூறுகிறார் ஆரி!