Wednesday, April 14, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தயாரிப்பு நிர்வாகியுடன் மோதல்!நடந்தது என்ன? நடிகை சபிதா ராய் விளக்கம்!!

admin by admin
April 30, 2017
in News
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

இளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.!!!

ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்!

‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.

சமிபத்திய தன்னைப் பற்றிய சர்ச்சை குறித்து நடிகை சபிதா ராய் விளக்கம் – 30.4.17
 
sabitha-rai-vani-rani--serial22எனது பெயர் சபிதா ராய். எனது அம்மா பெயர் பொள்ளாச்சி பிரேமா. ஏ.வி.எம் நிறுவனம், எஸ்.பி.முத்துராமன் சாரின் பல படங்களில் ரஜினி – கமல் சாரோடு நடித்துள்ளார். நானும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளேன். படிப்புக்குகாக சில காலங்கள் திரையுலகை விட்டு விலகியிருந்தேன். தற்போது மீண்டும் திரையுலகிற்குள் நுழைந்து ‘க க க போ’ படத்தில் நடித்துள்ளேன். படங்கள் தவிர்த்து விகடன் நிறுவனம் மற்றும் ராடன் நிறுவனம் தயாரித்த 18 நாடகங்களுக்கு மேலமாகவும் நடித்துள்ளேன். ராடன் நிறுவனத்தில் ‘தாமரை’, ‘இளவரசி’ மற்றும் தற்போது ‘வாணி ராணி’ நாடகத்தில் நடித்து வருகிறேன். 
 
‘வாணி ராணி’ நாடகத்தில் எனது அப்பா ஸ்தானத்தில் நிர்வாக தயாரிப்பாளர் சுகுமார் என்பவர் இருந்தார். அவருக்கு விபத்தில் காலில் அடிப்பட்டிருந்தது. அப்போது 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினேன். மனிதாபமான அடிப்படையில் அவரும் எனக்கு உதவியுள்ளார். ஆகையால் நானும் அவருக்கு உதவினேன். 2 மாதங்களாக சுகுமார் சாரும் எனக்கு பணம் தரவில்லை. சம்பவத்தன்று என்ன நடந்தது என்றால், காலையிலிருந்து இப்போது வந்து தருகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நான் அலுவலகத்தில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்ற போது, இல்லை அங்கு வேண்டாம் என்றார். இது அலுவலகம் மூலமாக நான் உங்களிடம் வாங்கவில்லை என்பதால் உங்களுடைய வீட்டுக்கு வந்தோ அல்லது வெளியே எங்கேயாவது பார்த்தோ கொடுக்கிறேன் என்றார். இன்று கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தொடர்ச்சியாக தொலைபேசியில் இதோ, அதோ என இழுத்துக் கொண்டே இருந்தது எனக்கு பிடிக்கவில்லை. 
 
மாலையில் தொலைபேசியில், “மனைவி ஊரிலில்லை. ஆகையால் மகன்கள் மட்டும் தான் வீட்டில் உள்ளார்கள். நாங்களும் இரவு ஊருக்குச் செல்கிறேன். ஆகையால் என்னால் வந்து தர இயலாது. நீங்கள் வந்து வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார். எனக்கு சுகுமாருடைய வீடு அவ்வளவாக தெரியாது. அதனால் நண்பர்களுடன் சென்று, வீட்டிற்கு கீழேயே உட்கார்ந்துவிட்டேன். மேலே கூட நான் செல்லவில்லை. அப்போது சுகுமாரும், அவருடைய நண்பரும் வண்டியில் வந்து இறங்கினார்கள். ஏன் இங்கு வந்தாய் என்று கோபத்துடன் கேட்க, நானும் “நீங்களே தானே வரச் சொன்னீர்கள்” என்று கோபத்துடன் பதிலளித்தேன். வீட்டில் மனைவி இல்லை என்பதால் வீட்டுக்கு வந்து வாங்கி செல்லும்படி நீங்கள் தானே சொன்னீர்கள் என்று நான் பேச, எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. நான் அப்படிச் சொல்லவே இல்லை என்ற போது, அவருடன் வந்தவருந்தவரிடம் எனது தொலைபேசியைக் காட்டி அவர் தான் வரச் சொன்னார் என்று கூறி ஆதாரத்தைக் காட்டினேன். எனது கோபம் தாக்க முடியாமல், சத்தமாக பேசிய உடனே சுகுமார் என்னை அடித்து போனை புடிங்கினார். நானும் அவரை அடித்துவிட்டேன்.
 
இதற்கிடையே எங்களுக்கு இடையே நடந்த சண்டையை, சுகுமார் வீட்டுக்கு கீழே உள்ளவர்   தொலைகாட்சியில் பணிபுரிபவர். அவர் எங்களுடைய வாக்குவாதம் மற்றும் சண்டையை, எங்களுக்கு தெரியாமல் தொலைபேசியில் காட்சிப்படுத்தியுள்ளார். அவருக்கும் சுகுமாருக்கு ஏற்கனவே பகை இருந்துள்ளது. அவர் தான் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை வந்து எங்கள் இருவருக்கும் சமரசம் செய்து வைத்தார்கள். நான் செய்தது தவறு தான், 2 நாட்களில் பணம் கொடுத்துவிடுகிறேன். ஏமாற்றியது தவறு தான். நீ எனது பெண் ஸ்தானத்தில் இருக்கிறாய் என்று சுகுமாரும் மன்னிப்புக் கேட்டார். அப்போது ஒரு காவல்துறை அதிகாரி என்னிடம் “கீழ் வீட்டில் உள்ளவர், வீடியோவாக உங்களுடைய சண்டையை எடுத்துள்ளார். நீங்க சம்பந்தப்பட்டு இருப்பதால் போய் பேசிவிடுங்கள்” என்றார். நான் உடனே அவருடைய வீட்டுக்குச் என்று காலில் விழுந்து “அண்ணா.. பணம் அளிக்க வேண்டும் என்பதால் தான் வந்தேன். ஊருக்கு போய்விட்டு வந்து அளிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அது கைகலப்பாகி விட்டது. எனக்கு இன்னும் திருமணமாக வில்லை. வீடியோ வெளியே வந்தால் பிரச்சினையாகி விடும். தயவு செய்து அழித்துவிடுங்கள் ” என்று கெஞ்சினேன். அதற்கு “எனக்கு அவன் மீது தான் ஆத்திரம். உங்கள் மீது எதுவுமில்லை தங்கச்சி” என்றார். “அண்ணா.. நான் சம்பந்தப்பட்ட விவகாரம் ப்ளீஸ்” என்று கேட்டேன். சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனுப்பிவிட்டார்.
 
நானும் வீட்டுக்கு வந்து இறங்குகிறேன். அதற்குள் எங்கள் இருவரையும் தவறாக சித்தரித்து தொலைகாட்சியில் செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். எனக்கு பேரதிர்ச்சியாகி விட்டது. எனக்கு அம்மா மட்டும் தான். உடன்பிறந்தவர்கள் யாருமே கிடையாது. காவல்துறையில் எந்தவொரு புகாருமே பதிவாகவில்லை. டி.ஆர்.பிக்காக் அப்படியொரு செய்தியை  தொலைகாட்சி வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள். அந்த  தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் “நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று பேசியதற்கு “இனிமேல் போடவில்லை. நீங்கள் ஒரு பேட்டி கொடுங்கள் வெளியிடுகிறோம்” என்று சொல்கிறார்கள். அந்த வீடியோ பதிவில், முன்னால் – பின்னால் பேசியது எதையுமே வெளியிடாமல் “மனைவி இல்லை. வீட்டுக்கு வரச்சொல்லி காசு வாங்கிச் செல்ல சொன்னீர்களே” என்று பேசியதை மட்டும் வெளியிட்டுள்ளார்கள். 
 
யாரோ ஒருவர் செய்தியை எடுத்து கொடுத்ததிற்கு என்னுடைய வாழ்க்கையை வீணாக்கிவிட்டார்கள். எனது அப்பா வயது இருப்பவரோடு, கள்ளக்காதல் என செய்தி வெளியிட்டுவிட்டு இப்படி சொல்வதற்கு எப்படி தான் மனது வருகிறது என தெரியவில்லை. மேலும், தொலைக்காட்சியில் நிறுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பிவிட்டார்கள். இதனால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதே மாதிரி வேறு எந்தவொரு பெண்ணுக்கும் நடைபெறக்கூடாது. இந்த செய்தியின் மூலமாக 2 குடும்பத்தின் வாழ்க்கையை சிதறடித்துவிட்டார்கள். 2 குடும்பத்தை சிதைத்து அப்படி என்ன டி.ஆர்.பி போட்டி என தெரியவில்லை.  இப்பிரச்சினையால் பெண் நிறுவனரான ராதிகா சரத்குமார் என்னிடம் என்ன பிரச்சினை என்று கூடக் கேட்காமல் வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள். 
 
இதனை நான் நடிகர் சங்கத்தில் விஷால் அண்ணா மற்றும் கார்த்தி அண்ணாவிடம் கொண்டு சென்றேன். தற்போது அவர்கள் தான் எனக்கு துணை நிற்கிறார்கள். நான் தவறு செய்திருந்தால் கூனிகுறுகி நிற்பேன். என் மீது எந்தவொரு தவறுமே இல்லை. வேறு எந்தவொரு தொலைக்காட்சி வெளியிடவில்லை, டி.ஆர்.பிக்காக இப்படியொரு செய்தியை வெளியிட்டு என்னை தவறாக சித்தரித்துவிட்டார்கள். ஒரு நாள் டி.ஆர்.பிக்காக எனது மொத்த வாழ்க்கையின் மீது கருப்பு புள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், இதனை தைரியமாக எதிர்கொள்வேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Previous Post

நடிகர் ஆரியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா…!

Next Post

First Look Poster of “Gulebagavali”

admin

admin

Related Posts

இளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.!!!
News

இளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.!!!

by admin
April 14, 2021
ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்!
News

ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்!

by admin
April 14, 2021
‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.
News

‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.

by admin
April 14, 2021
நடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்?
News

நடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்?

by admin
April 14, 2021
விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..!
News

விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..!

by admin
April 13, 2021
Next Post
First Look Poster of “Gulebagavali”

First Look Poster of "Gulebagavali"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்!

ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்!

April 14, 2021
‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.

‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.

April 14, 2021
நடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்?

நடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்?

April 14, 2021
விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..!

விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..!

April 13, 2021

Actress

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

April 5, 2021
Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani