கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் நடத்திய பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.பலர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.மேலும்,. விஜய் கட்சி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்து ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு ஏற்கனவே சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்று ,அங்குள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.விஜய் மற்றும் அவருடன் வந்த அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்தனர்.அவர்களை அழைத்து சென்ற கார் கூட கறுப்பு நிறத்தில் இருந்தது .காலை 11.39 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.இஅவருடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர்.டெல்லி விமான நிலையத்தில் விஐபி கேட் வழியாக வந்த விஜய்யை யாரும் அணுக முடியாத படி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு உள்ளதால், டெல்லியிலும் விஜய் செல்லும் பாதைகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்..
சிபிஐ அதிகாரி சுனில் குமார் தலைமையிலான குழு, விஜய்யிடம் விரிவான கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டது..கரூரில் கூட்டம் நடந்த இடத்திற்கு திட்டமிட்டபடி வராமல் விஜய் காலதாமதமாக வந்ததற்கான காரணம் என்ன? தாமதம் காரணமாக நிகழ்வின் மேலாண்மை பாதிக்கப்பட்டதா? மக்கள் மயக்கமடைந்து விழுந்தபோதும் ஏன் உரையை நிறுத்தவில்லை,? கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டதாகவும்,கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை எப்போது தெரிய வந்தது? அதனைத் தடுக்கும் வகையில் உங்கள் தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது போன்ற கேள்விகளை ஒருவர் மாற்றி ஒருவர் சரமாரி கேட்டதாகவும் கூறப்படுகிறது.காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த விசாரணை, மதிய உணவுக்காக மட்டும் கொஞ்சம் இடைவெளி விட்டு,மீண்டும் தொடர்ந்து இடைவிடாமல் நடந்தது முடிந்துள்ளதாகவும் மதியம் அவருக்கு சைவ உணவு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெவிக்கின்றன.
டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் அதே நேரத்தில், கரூரில் உள்ள சிபிஐ முகாம் அலுவலகத்தில் விஜய் பிரசாரத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்கள் 8 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்தாது குறிப்பிடத்தக்கது.
விஜய் அளித்த பதில்கள் வீடியோவாகவும்,எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விசாரணையின் அடிப்படையில் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












