நடிகரும் தவெக தலைவருமான விஜய், டெல்லியில் நடந்த 7 மணி நேர சிபிஐ விசாரணைக்கு பின்னர், இன்று காலை சென்னைக்கு புறப்பட்டார். அவரிடம் நடந்த 7 மணி நேரம் விசாரணையில், 100 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு விஜய் அளித்த பதில்கள் ஆவணப்படுத்தப்பட்டு அவரிடம் கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்
இது குறித்து டெல்லி வட்டாரங்கள் கூறுகையில், வரும் 19ஆம் தேதி விஜய் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வகையில் அவருக்கு சம்மன் அனுப்ப பட்டுள்ளதாகவும்பொங்கல் விடுமுறைக்கு பின்னர், மீண்டும் நடிகர் விஜய்யை டெல்லிக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












