இயக்குனர் பாண்டிராஜ் ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் ‘2 டி ‘என்டர்டேயின்மென்ட் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் சூர்யா – அமலா பால் ஜோடியாக நடிக்கின்றனர். ஆனால் பசங்க பாணியில் சிறுவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்குகிறார் பாண்டிராஜ்.இப்படத்திற்கு தற்போது ‘ஹைக்கூ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.சூர்யா, அமலா பால் தவிர, நடிகை பிந்து மாதவி முக்கிய கேரக்டரை ஏற்றுள்ளார்.காமெடி நடிகர் சத்யன் நடிக்கிறார்.இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாக உள்ளது. வரும் 20-ந் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது