பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று காலை தொடங்கியது. தமிழ்த் திரைப்பட த் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி S தாணு மற்றும் பொருளாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ரேயான் ராதிகா ,மனோபாலா ஆகியோர் பங்கேற்று பாம்பு சட்டை குழுவினரை வாழ்த்தினர். பாபி சிம்ஹா, ராஜேந்திரன் நடித்த முதல் ஷாட்டை கிளாப் அடித்து துவங்கி வைத்தார் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார். நாயகன் பாபி சிம்ஹாவின் ஹேர் ஸ்டைல் குறித்து அவரிடம் சில விஷயங்களை கூறினார்.. R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
“படத்தின் முதல் கட்ட படப்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.என்னை இயக்குனராக அறிமுகபடுத்தும் தயாரிப்பளர்களுக்கும். எனது குரு இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.” என கூறினார் இயக்குனர் ஆடம் தாசன்