இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘பாகுபலி 2’ கடந்த வாரம் வெளியாகிஇது வரை உலகம் முழுவதும் ரூ.750 கோடி வசூல் செய்துள்ளதாம், ரூ.1000 கோடி வசூலை இன்னும் ஒருசில நாட்களிலேயே நெருங்கிவிடும் என்கிறார்கள்..இந்நிலையில் பிரபல உட்டாக பேட்டி ஒன்றில் ராஜமவுலி, நடிகர் ரஜினிகாந்த் படத்தை இயக்குவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், ‘இந்திய திரையுலகில் ரஜினிகாந்த் மிகப்பெரிய ஸ்டார். அவரிடம் கால் ஷீட் கிடைக்காதா என்று பலரும் காத்திருக்கும் வேளையில், ரஜினியை வைத்து இயக்குவதற்கு, ஒரு நல்ல கதை கிடைத்து, வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக இயக்குவேன். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை பாக்கியமாக கருதுவேன்’ என்று கூறியுள்ளார்.முன்னதாக ‘பாகுபலி 2’ படத்தை பார்த்து ரஜினி வாழ்த்தியதும், ரஜினி வாழ்த்தியதை, கடவுளே வந்து வாழ்த்தியது போல் உணர்வதாக தெரிவித்து ராஜமெளலி நன்றியும் தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.