நடிகர் ரஜினிகாந்த் இம்மாதம் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நாளொன்றுக்கு மூன்று மாவட்டம் என ஐந்து நாட்களில் 15 மாவட்ட ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 15ம் தேதி வரும் திங்கட்கிழமை முதல் நாள் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 250 ரசிகர்களை சந்திக்கிறார். அப்போது ஒவ்வொருவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்கிறார் ரஜினி. இந்த முதல்கட்ட ரசிகர் சந்திப்பை 19ம் தேதி வெள்ளிக்கிழமை முடிப்பவர் அன்று திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். இச் சந்திப்பு சென்னையில் உள்ள ராகவேந்திரர திருமண மண்டபத்தில் நடக்கிறது.