திருப்பதி பி ரதர்ஸ் பட நிறுவனம் சார்பில், என்.லிங்குசாமி, என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தயாரித்து வரும் புதிய படம் ‘இடம் பொருள் ஏவல்’.இதில், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா,
ஐஸ்வர்யா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் சீனு ராமசாமி திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள‘இடம் பொருள் ஏவல்’ பாடல்களை வருகிற 18
ஆம் தேதி வெளியிடலாம் என முடிவு செய்து, அதற்குரிய ஏற்பாடுகளில் பட நிறுவனம் இறங்கியிருந்தது,இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இணையத்தில் இப்படத்தின் பாடல்களை யாரோ திருட்டுத்தனமாக வெளிஇது விட , 18 ஆம் தேதி வெளியாக வேண்டிய பாடல்கள், ஒரு வாரத்திற்கு முன்பே இணையத்தில் வெளியானதில், தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் உள்ளிட்ட படக்குழுவே
அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமியிடம் கேட்டபோது, ‘முதன்முறையாக யுவன்ஷங்கர் ராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் இணையும் படம் இது என்பதால், அதனை டிசம்பர் 18 ஆம் தேதி, அனைவர் முன்னிலையிலும்
வெளியிடலாம் என்ற திட்டத்தில் அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபட்டு வந்தோம். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் பாடல்கள்
இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். மிகுந்த
சிரத்தையெடுத்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு இப்படி திருட்டுத்தனமாக மக்களை சென்றடைந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும்
மனஉளைச்சலையும் தருகிறது. ஆனால் ,அனைவரும் இந்த நிலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது’ என்கிறார்.