கடந்த வாரம் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், அவர்களிடையே பேசிய போது, ‘தான் ஒரு பச்சை தமிழன் என்றும், நான் அரசியலுக்கு வந்தால் என தப்பு என்றும் கேட்டார். மேலும் என்னுடைய அப்பா கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பதில் தான் பிறந்தார். ஆகையால் நான் ஒரு தமிழன் தான் என்றும் கூறினார்.
மேலும் என்னை நீங்கள் இங்கிருந்து விரட்டினால் நான் கர்நாடகாவிற்கு செல்ல மாட்டேன்
இமயமலைக்கு தான் செல்வேன் என்றும் கூறினார். தமிழக அரசியலில் நிறைய அரசியல் வாதிகள் நல்லவர்கள் தான் ஆனால் அரசியல், நிராவகம் சீர் கெட்டு போயுள்ளதே என்றும் அடுக்கடுகான குற்றச் சாட்டுகளை கூறினார் இது அரசியல் வட்ராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவருக்கு ஆதரவாகவும்,எதிர்ப்பாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஜினியைச் சுற்றி ஆயிரம் அரசியல் சர்ச்சைகள் இருந்தாலும், அவர் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும்காலா என்ற புதிய படத்துக்குத் தயாராகி விட்டார். தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் உருவாக உள்ளது. இந்நிலையில், சென்னை கீழ்பாக்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஃபிலிம் ஃபேர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ், ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதுகுறித்த பேச்சுகளால் எங்களது குடும்பத்துக்கு எந்த அழுத்தமும் இல்லை. அரசியல் பற்றிய முடிவு மட்டுமல்ல, எந்த முடிவாக இருந்தாலும் ரஜினிகாந்த் எடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும்’ என்று தெரிவித்தார்.