சமீபத்தில்,ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தபோது அரசியல் பற்றிய தனது கருத்துக்களை வெளியிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிதது.அவருக்கு எதிரான கருத்துக்களும் கூறப்பட்டன. கொடும் பாவியும் எரிக்கப்பட்டன.
இதற்கு பதிலடியாக ரஜினி ரசிகர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில்,இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
அனைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு, இக்கடிதம் மூலம் தெரிவிப்பது யாதெனில், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, தலைமை மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன்.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.