சென்னையில் இன்று தனியார்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் ஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”நான் இந்தியனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். போட்டி அரசியலில் நான் இல்லை, நான் அரசியலுக்கு வந்து வெகு நாளாகிவிட்டது. எப்போது கையில் மை வைத்தேனோ அப்போதே வந்துவிட்டேன். தற்போதைய அரசியலைப் பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக் கூடாது. நான் நடிகர்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்.அரசியல் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் சேவை மனப்பான்மையுடன் இல்லை என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.
சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியதில் தவறில்லை, வித்தியாசமானதும் இல்லை. என்னைக் கூட மலையாளி என்று கேரளாவில் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதற்காக நான் கேரளாவில் முதல்வர் ஆவேன் என்பது அர்த்தம் அல்ல. எனக்கு அதில் விருப்பமும் இல்லை” என்றார்.