மூத்த தமிழ்த்திரைப்பட நடிகர் சாமிகக்கண்ணு உடல் நல்ல குறைவால் நேற்று (சனிக்கிழமை ) மாலை சென்னையில் காலமானார்.அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
” தமிழ் சினிமாவிலன் ஜாம்பவான்களான எம். ஜி.ஆர், சிவாஜி, ரஜனி,கமல் முதல் இன்றைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் குணசித்திர நடிகராக பணியாற்றிய 400 க்கு மேல் படங்களில் நடித்துள்ளார். தலைமுறைகள் கண்ட , தனது நடிப்பாற்றலால் ரசிக உள்ளங்களில் சிரஞ்சீவியாக வாழும் மூத்த கலைஞரான சாமிக்கண்ணு அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்கம் சங்கத்தில் ஆரம்பகாலத்திலிருந்து உறுப்பினராக உள்ளார். தனது எட்டு வயதிலிருந்து மேடைநாடக கம்பெனிகளில் பனியாற்றி1954 ல் புதுயுகம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர்.கே.எஸ்.கோபாலகிருஷ்ணண்,
எஸ் பி முத்துராமன் ,மாதவன் ,மற்றும் மகேந்திரன்,இராமநாராயணன்ராஜசேகர்,ராஜ்கிரண்,
மற்றும் பல இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர். பட்டிக்காடாபட்டணமா,பாட்டும்பரதமும்,நான்,அன்னக்கிளி
சகலகலாவல்லவன்,வண்டிசக்கரம், என்ராசாவின்மனசிலே,மகாபிரபு போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் என்றும் ரசிகர்கள் மனதை கவர்ந்து நிலைத்து நிற்ப்பவையாகும். அன்னாரது மறைவு நாடக-திரைப்பட நடிகர் சமூகத்திற்கு மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்”
இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.