நடிகர் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நடித்த கூட்டத்தில் ஒருத்தன் “மாற்றம் ஒன்றே மாறாதது“ Gift Song ப்ரோமோ சாங் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் , ரமானியம் டாக்கீஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் “ கூட்டத்தில் ஒருத்தன் “. அசோக் செல்வன் , ப்ரியா ஆனந்த நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை தா.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இது வரை தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள் , கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளது. இப்படம் கொஞ்சம் வித்யாசமாக மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும். இந்த உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் மிடில் பெஞ்சர்ஸ் தான். அவர்களை கொண்டாடும் படமாக கூட்டத்தில் ஒருத்தன் இருக்கும்.இப்படத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் அனைத்து பாடல்களும் ஆல்பம் ஹிட்டாக வெற்றி பெற்றுள்ளது. “ மாற்றம் ஒன்றே மாறாதது “ Gift Song ஒவ்வொரு பூக்களுமே பாடலைப் போல மோட்டிவேஷனல் பாடலாக இருக்கும். கவிஞர் கபிலன் பாடல் வரிகளில் அனைத்து பாடல்களும் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைத்தும் அனைவரையும் ஊக்குவிக்கும் வரிகளாக அமைந்துள்ளது இந்த சிறப்பாகும். இப்பாடலில் வரும் வரியான “ உன் கேள்விக்கு விடை நீயடா , மண்பானையாய் உடையாதடா “ ,தோல்வியெல்லாம் தோல்வியல்ல , வெற்றி என்றும் தூரமல்ல போன்ற வரிகள் அனைவருக்கும் பாஸிட்டிவான ஒரு விஷயத்தை கொடுக்கக்கூடிய வரிகளாக இருக்கும். இப்பாடலை படமாக்கும் போதே எல்லோரும் இப்பாடல் அருமையாக உள்ளது என்று பாராட்டினார்கள். அப்போது நாங்கள் யோசித்த விஷயம் தான் இந்த Gift Song . படத்துக்குள்ளே மட்டும் இந்த பாடலை வைக்காமல் , இதை ஒரு ப்ரோமோ பாடலாக மாற்றலாம் என்று முடிவு செய்தோம். “ கொலைவெறி டி “ பாடல் எப்படி ஒரு சூப் சாங்காக இருந்ததோ அதே போல் இது Gift Song என்று எல்லோராலும் கொண்டாடப்படும் பாடலாக இருக்கும். இப்பாடலை நாங்கள் உருவாக்கிய நேரத்தில் தான் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரையும் சந்தித்து அவர்களுக்குமாற்றத்தை பற்றி சொல்லகூடிய அழகான கிப்ட் ஒன்றை வழங்கினோம். அந்த பாடலை வருகிற ஜூன் 2௦ விஷுவலாக வெளியிடுகிறோம். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள விஷுவல்ஸ் படத்தில் இடம்பெறாது. படத்துக்கென்ற தனியாக நாங்கள் விஷுவல்சை எடுத்துள்ளோம். இப்பாடலில் அகரம் அறக்கட்டளையின் நிறுவனர் , நடிகர் சூர்யா , ஆர்யா , சிவகார்த்திகேயன் , நாசர் , பிரகாஷ் ராஜ் , சிவகுமார் , விஷ்ணு விஷால் , சமுத்திரகனி , ஆர்.ஜே. பாலாஜி , அசோக் செல்வன் , ப்ரியா ஆனந்த் , நிவாஸ் கே பிரசன்னா , செப் தாமு , ரம்யா நம்பீசன் , வி,ஐடி கல்லூரி மாணவர்கள் போன்ற பலர் இப்பாடலில் இடம்பெற்றுள்ளனர். இப்பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றார் இயக்குநர் த.செ. ஞானவேல்.
இசை :- நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு :- பி.கே.வர்மா \
எடிட்டிங் :- ஜெய்
ஆர்ட் :- கே. கதிர்
ஸ்டன்ட் :- அன்பறிவு
நடனம் :- சதீஷ்
பாடல்கள் :- கபிலன்
தயாரிப்பு மேற்ப்பார்வை :- வைரம் சங்கர்
இப்படம் மூலம் கதை,திரைக்கதை,வசனம்,எழுதி இயக்குனராக – T.N.ஞானவேல்அறிமுகமாகிறார்.
தயாரிப்பு :- ரமாணியம் டாக்கீஸ்
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்