கடந்த வெள்ளிகிழமை வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “ மரகதநாணயம் “ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து

மரகதநாணயம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தின் இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போது இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் அனைவருக்கும் முக்கியத்துவம் இருந்தது. மரகதநாணயம் திரைப்படத்தை பொறுத்தவரை கதை தான் ஹீரோ. நடிகர் முனிஸ்காந்த் மற்றும் டேனியல் முதுகெலும்பாக இருந்து படத்தை தாங்கி பபிடித்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அருண்ராஜா காமராஜ் , நிக்கி கல்ராணி ஆகியோரின் கதாபாத்திரம் மற்றும் அவர்களுடைய நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இப்படத்தின் படபிடிப்பின் போதே இயக்குநர் சில காட்சிகளை எடுக்கும் போது இந்த காட்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் கை தட்டல் வாங்கும் , இங்கே நிறைய சிரிப்பார்கள் என்று உறுதியாக கூறினார். அப்போது இயக்குநர் எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறார் என்று யோசித்து இருக்கிறேன். இயக்குநர் சொன்னது போலவே திரையரங்கில் ரசிகர்களோடு படத்தை பார்க்கும் போது அவர்கள் அனைவரும் அக்காட்சிகளை கைதட்டி , சிரித்து ரசிக்கிறார்கள். அடுத்ததாக தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இப்படத்தை பற்றி மற்ற தகவல்களை முறையாக விரைவில் அறிவிப்போம். இதைதொடர்ந்து தெலுங்கில் நடிகர் ராம் சரணுடன் ரங்கஸ்தளம் 1985 என்ற படத்தில் நடித்து வருகிறேன்.பிரம்மாண்டமான பீரியட் படமாக உருவாகி வரும் இப்படத்தை “ 1 , நானுக்கு பிரேமதோ “ போன்ற வித்தியாசமான வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ளார். இயக்குநர் சுகுமார் உடன் பணியாற்றுவது எனக்கு மிகசிறந்த அனுபவமாக உள்ளது. அடுத்ததாக நானியுடன் நின்னு கோரி என்ற படத்தில் நடித்து வருகிறேன். வில்லன் கதாபத்திரமோ அல்லது இரண்டு நாயகர்களுடன் நடிப்பதிலோ எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை.
எந்த ஒரு கதையிலும் என்னுடைய கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என்பது தான் எனக்கு முக்கியம். தெலுங்கு விட நான் தமிழ் படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகிறேன் இதை நான் தெலுங்கு பிரஸ் மீட் ஒன்றில் கூட கூறியுள்ளேன். ஏனென்றால் நான் இங்கு தமிழ் நாட்டில் தான் படித்து வளர்ந்தேன். இங்கே வெளியாகும் அனைத்து படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து வளர்ந்துள்ளேன். அதனால் எனக்கு தமிழ் எளிதாகவும் , மனதுக்கு நெருக்கமாகவும் உள்ளது. எல்லோரும் கல்யாணம் எப்போது என்று கேட்கிறார்கள் ?? கல்யாணம் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது , வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் கல்யாணம் பண்ண உள்ளேன் என்றார் நடிகர் ஆதி.
