அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வந்த புதிய படத்துக்கு தற்போது மெர்சல் என தலைப்பு வைத்துள்ளனர், இந்நிலையில் இவர் நடிக்கும் படங்களின் போஸ்டர்களில் எப்போதும் ‘இளைய தளபதி’ விஜய் என்று போடுவது தான் வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால், இந்த முறை போஸ்டர்களில் ‘தளபதி’ விஜய் என்று வைத்துள்ளனர். இவை விஜய் ரசிகர்களை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நாள் வரை விஜயை இளையதளபதி என்றே அழைத்து வந்த அவரது ரசிகர்கள் தற்போது தளபதி என்றே அழைப்பது குறிப்பிடத்தக்கது.தமிழக அரசியல் வட்டாரத்தில் தளபதி என்றால் அது ஸ்டாலினைத் தான் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!