கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தில் சீயான் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகியோர் நடித்து வருவது தெரிந்ததே. தற்போது இவர்களுடன் சிம்ரன், ராதிகா, பார்த்திபன், டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷிணி, வம்சி உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் இணைந்திருக்கிறார்கள்.
அண்மையில் இப்படத்திற்காக இருபத்தியிரண்டு நாள்களில், பன்னிரண்டு கலைஞர்கள் பங்களிப்புடன் நான்கு நாடுகளுக்கு பயணித்து சண்டை க்காட்சி ஒன்றைப் படமாக்கியிருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்பட்ட முதல்முயற்சி என்ற சாதனையை செய்திருக்கிறது.
சுலோவேனியா, பல்கேரியா,துருக்கி மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில், பன்னிரண்டு சண்டைக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்டமான சண்டைகாட்சி படமாக்கப்பட்டது. இந்த நாடுகளுக்கு சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளர்களும், ஒளிப்பதிவாளர் மனோஜும் முன்னதாக பயணித்து தென்னிந்திய திரைப்படங்களில் இடம்பெறாத இடங்களாக அலைந்து திரிந்து தேடி தேர்ந்தெடுத்தனர்.